ஒரு சில பைத்தியங்களின் கையில் அதிகாரம் கிடைக்கும் என ஜே.ஆர் அரசியலமைப்பில் 36-2 வது சரத்தை சேர்த்தது நல்லதாகி போனது : தயாசிறி ஜயசேகர.
எதிர்காலத்தில் ஒரு நாள் சில பைத்தியக்காரர்கள் ஆட்சிக்கு வருவார்கள், இப்படியொரு விபரீதம் நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்த ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாக பதவி வகித்த போது அரசியலமைப்பில் 36-02 உறுப்புரை சேர்க்கப்பட்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அந்த பிரிவின்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை குறைக்கவோ அல்லது ரத்து செய்யவோ எந்த ஒரு சட்டத்தையும் முன்னோக்கி கொண்டு வர முடியாது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சம்பளத்தை அதிகரிக்க முடியும் என்றாலும், அதைக் குறைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாதவற்றை மக்களைக் கிளர்ச்சியடையச் செய்வதற்கு கிளுகிளுப்பான கதைகளைக் கூறினாலும் தற்போதைய ஜனாதிபதி தேவையென்றால் சட்டமூலத்தைக் கொண்டுவந்து தனது சிறப்புரிமைகளைத் திரும்பப் பெறலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.