தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன் போராட்டம்..

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தங்களின் உறவினர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும், தங்களுக்கு அவர்களது சம்பளமும் கிடைக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனால் தமக்கு வாழ வழியில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவை குறித்து கடந்த அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டப்பட்ட போதும், அவர்கள் அதில் தலையிடவில்லை எனவும் தற்போதைய அரசாங்கம் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.