கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கி கணவன், மனைவி கொடூரக் கொலை! – பருத்தித்துறையில் பயங்கரம்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் பெற்றோரான மேற்படி இருவரும் கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 54), அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா (வயது 53) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் வீட்டுக்கு இன்று காலை அயலவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்னர்.

அதன்பின்னர் பருத்தித்துறை நீதிவான் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களைப் பார்வையிட்ட பின்னர், குறித்த சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்று தெரிவித்த பருத்தித்துறை பொலிஸார், சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.