ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கம்பஹா மாவட்டத்திற்கான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் வேட்புமனுவை சமர்ப்பித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்க உத்தரவிடுமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்காமலே தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.

பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்று, பிரிதி பத்மன் சுரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கம்பஹா மாவட்ட சுயேச்சைக் குழு வேட்பாளர் கே.எம். மஹிந்த சேனாநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரி, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.