அனுப்புவதாக சொன்ன மில்லியன் டொலர்களை ஹந்துன்நெத்தியின் நண்பர் அனுப்பினாரா என்று தெரியவில்லை..- வாதபிட்டியவில் வறுத்தெடுத்த காஞ்சன விஜேசேகர (வீடியோ)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு மில்லியன் டொலரை இலங்கைக்கு அனுப்புவதாக கூறிய சுனில் ஹந்துன்நெத்தியின் நண்பர் அந்த தொகையை இலங்கைக்கு அனுப்பி வைத்தாரா என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வாதபிட்டிய நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார்.
அரசாங்கம் தொடர்ச்சியாக கடன் பெற்று வருவதாகக் கூறிய அவர், எதற்காக அரசாங்கம் கடன் வாங்கி நாட்டை ஆள வேண்டும் என எதிர்க்கட்சியில் இருந்த போது கேட்டதை நினைவு கூர்ந்தார்.
தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்தவுடன் பாஸ்போர்ட் பிரச்சனைகளை உடனே தீர்த்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட அரசு, தற்போது முந்தைய அரசை குற்றவாளியாக்கிறது.
மேலும், தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தின் திசைகாட்டிக்காக சமூக வலைதளங்களில் தோன்றிய இளைஞர்கள் தற்போது ஒரு மாதத்தை கடந்தும் சோகம் மிகுதியால் விரக்தியால் மறைந்துள்ளனர் என்றார்.