ஹரிணிக்கு அரசியலமைப்பு தெரியாது.. குழந்தைகளால் நாட்டை ஆள முடியாது..- ரணிலின் வன்முறை தாக்குதல்…(வீடியோ)

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு அரசியலமைப்பு பற்றிய புரிதல் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசனம் தெரிவித்துள்ளார்.

நாடு அமைச்சரவையால்தான் ஆளப்படுகிறது, அதிகாரிகளால் அல்ல என்றும் அவர் கூறினார்.

அவருக்கு அரசியலமைப்பு புரியவில்லை என்றால் அது பற்றி கற்பிக்க தான் தயார் அல்லது தினேஷ் குணவர்தனவை அனுப்ப தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய விடுத்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் , சம்பள அதிகரிப்பு தொடர்பில் கெபினட் அறிவுறுத்தல் வழங்கியதோடு , அதற்கான நிதியும் தன்னால் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். https://youtu.be/cQLxqfDRm3g

Leave A Reply

Your email address will not be published.