ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்டு பாவிக்கப்பட்டது எனக் கூறப்படும் BMW ரக கார் ஒன்று கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டல் கார் பார்க்கிங்கில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அவர் அண்மையில் (23) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.