இளம்பெண்ணின் உயிரை பறித்த மோமோஸ்

மோமோஸ் சாப்பிட்ட 31 வயது பெண் உயிரிழந்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 31 வயது பெண், ரேஷ்மா பேகம். இவர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பிகாரைச் சேர்ந்த சிலர் டெல்லி மோமோஸ் என்ற பெயரில் சாலையோர கடை நடத்தி வந்த கடையில் மோமோஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கடந்த வாரம் இந்த கடையில் மோமோஸ் சாப்பிட்ட 15க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரேஷ்மா பேகம் மற்றும் அவரின் குழந்தைகளுக்கு உடல் நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உணவு நஞ்சானதால் அவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை ரேஷ்மா பேகம் உயிரிழந்தார்.

இதையடுத்து குறிப்பிட்ட அந்த கடை குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவலர்கள் நடத்திய விசாரணையில் கடைக்கு உரிமமும் அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. சாலையோர உணவுகளை சாப்பிடும்போது கவனம் தேவை என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் இப்படியாக உணவுகளில் சாப்பிட்டு, உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துமனைகளில் அனுமதிக்கப்படுவதும், உயிர் பலியும் நடந்துவருகிறது. இதனால், வெளியே உணவுகளில் சாப்பிடுவதே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.