ரஞ்சன் ஜனாதிபதிக்கு அனுப்பிய இரகசிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஜனநாயக குரல் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்கவினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

அதில் ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமையை ரத்து செய்யும் முடிவை இரண்டு ஆண்டுகள் குறைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளமை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என கட்சியின் ஊடகப் பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு இரகசியமாக வழங்கப்படவில்லை எனவும், அது சமூக ஊடகங்களில் எவ்வாறு கசிந்தது என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதுதான் புரியவில்லை என்று கூறிய அவர், இன்று தங்களது கட்சியை கண்டு பலரும் அஞ்சுகின்றனர் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.