இஸ்ரேலியத் தாக்குதலில் 20 பாலஸ்தீனர்கள் மரணம்.
காஸா முனையெங்கும் இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியதில் அக்டோபர் 30ஆம் தேதியன்று குறைந்தது 20 பாலஸ்தீனர்கள் மாண்டதாக காஸாவில் உள்ள மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.
காஸாவின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
அந்த இடத்துக்கு அருகில் அக்டோபர் 29ஆம் தேதியன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 93 பேர் மாண்டனர் அல்லது காணாமல் போனதாக காஸா சுகாதார அமைச்சு கூறியது.
அந்தத் தாக்குதல் மிகவும் மோசமானது, பயங்கரமானது என்று அமெரிக்கா சாடியது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் கருத்து தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, காஸாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் விளைவாகக் குறைந்தது ஏழு பாலஸ்தீனர்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
காஸாவின் ஷேக் ரட்வான் குடியிருப்புப் பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஐவர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.