நம்பி ஏமாறாதீர்கள்! – சஜித் பிரேமதாச
மின் கட்டணம் 66% குறைக்கப்படும் என்றார்! 160க்கு பெட்ரோல் தருவதாக சொன்னார்கள்! பொருட்களின் விலை குறையும் என்றார்கள்! பாஸ்போர்ட் வரிசை முடிந்துவிடும் என்றார்கள்! ஒன்று கூட இல்லை! நாடு முழுவதும் ஏமாற்றப்பட்டது! IMF ஒப்பந்தத்தை மாற்றுவோம் என்று சொன்னவர்கள் இப்போது IMF-ன் கைப்பாவைகள்! தற்பெருமை பேசுபவர்களை நம்பி ஏமாறாதீர்கள்!
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகளை நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர், ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை, மின்சார கட்டணம் 66% குறைக்கப்படும், பொருட்களின் விலை குறைக்கப்படும் சொன்னவர்களால் அதை செய்ய முடியவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத்தை 66% குறைத்து, பொருட்களின் விலையைக் குறைத்து, வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாகவும், அரசாங்கம் மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் கோரிக்கை விடுப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மத்திய கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து சமகி ஜன பலவேகவின் தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.
அழுத்தங்களினால் அதிருப்தியில் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை எனவும், இவற்றை செய்வதற்கவும் , இந்த பிரச்சனைகளை தீர்க்ககவும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேவையில்லை எனவும், அரசாங்கமும் மக்களும் செய்வதறியாது தவிப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். .
அத்துடன், எந்தவொரு வரியையும் குறைக்க சர்வதேச நாணய நிதியம் இணங்கவில்லை எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வு கூட பிற்போடப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் காலில் ஆடமாட்டோம் என்று கூறியவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவையாக உள்ளதாகவும், ஆனால் SJB அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரிச்சுமையுடன் கூடிய பொருட்களின் விலைகளையும் மின்சார கட்டணங்களையும் குறைப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.