பதுளை பஸ் விபத்தில் 3 மாணவிகள் மரணம்! – 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்…

பதுளை, மஹியங்கனை வீதி 4 ஆவது மைல் கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவிகள் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும், 35 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, காயமடைந்தவர்களில் 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் மஹியங்கனைப் பக்கமாக சுற்றுலா சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெறும்போது பஸ்ஸில் 36 மாணவர்களும், 2 விரிவுரையாளர்களும், 2 இராணுவ அதிகாரிகளும். சாரதியும் என 41 பேர் இருந்துள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
காயமடைந்த 35 பேர் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.