லிட்டருக்கு வரி இல்லாத 170 ரூபா பெட்ரோல் எங்கே? – டி.வி.சானக்க கேள்வி.
பெற்றோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்கினால் ஒவ்வொரு லீற்றரையும் 170-190 ரூபாவிற்கு சந்தையில் கொடுக்க முடியும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் கட்சியினர் எதிர்கட்சியாக இருந்த போது தேர்தல் மேடைகளில் கூறியது போன்று எரிபொருள் வரியை நீக்கி மக்களுக்கு வரியின்றி எரிபொருளை வழங்குவதை காண காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் வரியை நீக்குவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அதனை ஒரே ஒரு வர்த்தமானி மூலம் செய்ய முடியும் எனவும் , மின்சாரக் கட்டணத்தையும் முப்பது வீதத்தால் குறைக்கப்படும் என தேர்தல் மேடையில் அப்போது கூறப்பட்டதாகவும், ஆனால் தற்போது ஐந்து வீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, அவர்கள் மக்களை முற்றாக ஏமாற்றிவிட்டனர் என ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.