சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளராக வைத்தியர் ஜயருவான் பண்டார.

சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளராக வைத்தியர் ஜயருவான் பண்டார இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மருத்துவ ஆய்வு நிலையத்தின் பிரதி பணிப்பாளராக செயற்பட்ட அவர் அப்பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு மீள் நியமனம் வழங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையிலேயே சுகாதார அமைச்சின் பேச்சாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.