ரணில் மீண்டும் அரசை கைப்பற்றுவாரா ? இந்திய தீபாவளி விழாவுக்கு ரணிலுக்கு மட்டும் அழைப்பு!
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி விழா கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
அரசாங்கத்திலிருந்து எவருக்கும் அழைப்பு விடுக்கப்படாத போதிலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செல்வாக்கு செலுத்தும் வகையில் பிரசன்னமாகியிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் ஒரே மேசையில் அமர்ந்து இரவு பதினொரு மணி வரை கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விக்கிரமசிங்க இந்த வார சந்திப்புகளை விட தூதரகங்களில் அதிக நேரத்தை செலவிட்டார் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாவட்ட வேட்பாளர் சாகல ரத்நாயக்கவுடன் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூதுவர் ஜூலியின் அழைப்பின் பிரகாரம் இவ்வாறு அங்கு மதிய உணவு சாப்பிடும் போது பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதேவேளை, பன்னலவில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கதையுடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ரணிலின் நண்பர் ஒருவரிடம், “உங்கள் தலைவர் விளையாடத் தயாராகிறாரா?” என்று கேட்டுள்ளார்.
இதேவேளை, ரணில் மீண்டும் தற்காலிகமான ஆட்சியை கைபற்ற போகிறார் என ரணிலினின் நண்பர்களிடையே பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.