காதலனைக் கரம் பற்ற பொலிஸ் வேடமிட்டு காதலனின் தாயை ஏமாற்றிய பெண் கைது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த சிவாவும் சென்னையைச் சேர்ந்த அபி பிரபாவும்காதலித்து வந்தனர். இந்நிலையில் சிவாவின் தாயாருக்கு காவல்துறையில் பணியாற்றும் பெண்தான் தனது மருமகளாக வரவேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது.
இதைக் காதலன் சிவா மூலம் அறிந்து கொண்ட அபி பிரபா, காவல்துறை உதவிஆய்வாளராக வேடமிட்டு சிவாவின் தாயை நேரில் சந்தித்துள்ளார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவாவின் தாய், தனது வருங்கால மருமகள் காவல்துறையில் பணியாற்றி வருவதாகப் பெருமையுடன் அக்கம்பக்கத்தாரிடம் கூற, இந்தத் தகவல் சிவாவின் குடும்பத்தினர் வசிக்கும் தாம்பரம் பகுதி முழுவதும்பரவியது.
இந்தத் தகவல் வடசேரி பகுதி காவல்துறையினருக்கும் எட்டியதையடுத்து உடனடியாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் உதவி ஆய்வாளரைப்போல் வேடமிட்டு வலம்வந்த அபி பிரபாவைக் கைது செய்துள்ளனர்.
அவருக்கு உதவி செய்த காதலர் சிவாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.