கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் பலி!

கேரளாவில் தண்டவாளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சேலத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஷோரனூர் பகுதியில் தண்டவாளத்தை தூய்மை படுத்தும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பரதபுழா என்ற நதிக்கு மேல் அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட நால்வர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக கேரள விரைவு ரயில் வேகமாக வந்தது.
ரயில் மிக அருகில் வந்துவிட்டதால், தப்பிக்க முடியாமல் நான்கு பேரும் சிக்கிக்கொண்டனர்.

ரயில் மோதியதில் வள்ளி, ராணி, லக்ஷ்மன் உள்ளிட்ட 4 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில் உடல்சிதறி நால்வரும் சம்பவ இடத்திலேய பலியாகினர். உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.