அதிவேக நெடுஞ்சாலைகளின் வேக வரம்பு மணிக்கு 60 கி.மீ ஆக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் பி.எச்.குணசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினால், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் போக்குவரத்தை கடந்து செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாகனங்களுக்கிடையில் குறைந்தது 50 மீற்றர் இடைவெளியை பேணுவது மிகவும் அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.