ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் அலுவலகம் திறப்பு.
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் தேர்தல் அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
தொழிலதிபர் நெல்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ப.உதயராசா நாடாவை வெட்டி அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
ஜனநாயகத் தேசியக் கூட்டணி ப.உதயராசா தலைமையில் தபால் பெட்டி சின்னத்தில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றது.
ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைகளை முன்னெடுக்கும் பொருட்டு குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது மேற்படி கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.