நல்லூரானை வழிபட்டதன் பின் பிரசாரத்தை ஆரம்பித்த ஐ.தே.க.
ஐக்கிய தேசியக் கட்சியினர் நேற்று திங்கட்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் தமது பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
இதன்போது யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் டேவிட் நவரட்னராஜ் கருத்துத் தெரிவிக்கையில்,
“நவாலியூர் சோமசுந்தரம் புலவரின் பேரனான நான் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுகினறேன்.
நல்லூர் கந்தனை வழிபட்டு, கந்தனின் அருளாசியுடன் பிரசாரப் பணிகளை ஆரம்பித்துள்ளேன். எமக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பெரும் ஆதரவு தந்து யானை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.” – என்றார்.