திசைகாட்டி பொய் சொல்லியே ஆட்சியைப் பிடித்தனர்- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
திசைகாட்டி பொய் சொல்லியே ஆட்சியைப் பிடித்தது. அவர்களிடம் திறமைஇல்லை. எனவே அனுபவமுள்ள. சிலிண்டர்காரர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் கூறுகிறார்.
பொய் சொல்லி ஆட்சியைப் பெற்ற திசைகாட்டி அரசாங்கத்தில், அனுபவமுள்ளஎவரும் இல்லை எனவும், நாட்டை மீட்டெடுக்க அனுபவம் உள்ளவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி நேற்றைய தினம் (04.11) வலியுறுத்தியுள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற புதிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். நாட்டின் மிகவும் கடினமான காலங்களில் தங்கள் அனுபவத்தால் நாட்டைக் காப்பாற்றியவர்கள்இங்கே உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பை வழங்க வேண்டும். அனுபவம் வாய்ந்தவர்கள் இங்கு இருப்பதால் தான் வாக்கு கேட்கின்றனர்.”
“ஏனென்றால், அரசாங்கத்தை நாங்கள் நடத்தி செல்ல வேண்டியுள்ளது. வங்குறோத்து நிலை நமது கடனை மீண்டும் நிலையானதாக ஆக்கியுள்ளது. அந்த உடன்படிக்கையின் படி செயற்பட்டு அந்த நிலையிலிருந்து வெளியே வருவோ்மென உறுதியளித்துள்ளோம்.”
“அந்தப் பணியைச் செய்யக்கூடியவர்களை இங்கு நியமிக்க வேண்டும்.
அதனால்தான் அனுபவசாலிகள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.