சிறைக் கைதிகளுடன் தகாத உறவு: இரு அதிகாரிகள் பணி இடைநீக்கம்.

மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருடன் தகாத உறவில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மற்றும் சேமிப்புத் திணைக்களத்தின் பாதுகாவலர் ஆகியோரே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்துக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிகாரிகள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.