அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே ஆகக் கடும் போட்டி
அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே ஆகக் கடுமையான போட்டியுடைய அதிபர் தேர்தல்களில் ஒன்றாக 2024 தேர்தல் விளங்குவதைக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
நாடெங்கும் அல்லது தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களில் கமலா ஹாரிசும் டோனல்ட் டிரம்ப்பும் ஒரு விழுக்காட்டுப் புள்ளிக்குமேல் முன்னிலை வகிக்கவில்லை. இரு வேட்பாளர்களில் எவருக்கும் 270 இடங்களைக் கைப்பற்றுவதற்குப் போதுமான மாநிலங்களில் முன்னிலை இல்லை.
நவீனகால தேர்தல் வரலாற்றிலேயே போட்டி இவ்வளவு கடுமையாக இருந்ததைக் கருத்துக்கணிப்புகள் காட்டியதில்லை.
வாக்களிப்பைப் பொறுத்தமட்டில், 2004 தேர்தலில் ஜான் கெரிக்கும் ஜார்ஜ் டபிள்யூ. புஷுக்கும் இடையேயான போட்டியே இதுவரை ஆகக் கடுமையானதாகக் கருதப்பட்டு வந்தது. அப்போதுகூட, திரு புஷ்தான் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த முறை டிரம்ப்போ ஹாரிசோ வெற்றிக்கு அவ்வளவு குறுகலான பாதையைச் சந்திக்கவில்லை.
முக்கியத் தேர்தல் களமான பென்சில்வேனியாவில் இரு வேட்பாளர்களும் முன்னணி வகிப்பதை அல்லது சமநிலையில் இருப்பதை சில நம்பகமான கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.