உலக சதுரங்க தரவரிசையில் சாதித்த 3 வயது சிறுவன்!
கொல்கத்தாவில் உள்ள கைகாலியைச் சேர்ந்த அனிஷ் சர்க்கார் என்ற சிறுவன் வரலாற்றில் மிக இளம் வயது செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மூன்று வயதே ஆன அனிஷ் சர்க்கார் 1555 என்ற FIDE ரேட்டிங்குடன் இளம் செஸ் வீரராக உருவெடுத்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு இருந்தே அனிஷ் செஸ் விளையாட தொடங்கியுள்ளார். இவரது வீடியோக்கள் சமூக வலைதங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ள நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவையும் கவர்ந்துள்ளது.
சமீபத்தில் சிறுவனின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்த மஹிந்திரா, “அனிஷ் சர்க்காருக்கு 3 ஆண்டுகள் & 8 மாதங்களே நிறைவடைந்துள்ளது. இவர் FIDE (அனைத்துலகச் சதுரங்கக் கூட்டமைப்பு) தரமதிப்பீடு பெற்ற இளைய வீரர். 1555 ரேட்டிங் பெற்றுள்ளார். 69 வயதில், நான் 1500 லெவலில் விளையாடுகிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சில நகர்வுகளை என்னால் தொடர முடிந்தவரை சிறப்பாக விளையாடுவேன்..! #இந்திய செஸ் அனிஷ் சர்க்கார் ரேட்டிங் என்ற ஹேஷ்டேக்கில் ஷேர் செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது 3,63,000 பார்வைகளை பெற்றுள்ளது. “இந்த சிறிய வயதிலேயே மூளை செழித்து, புதியதாக இருக்கும் என்று நம்புகிறேன்! வரும் இளைஞர்களின் அறிவு ஆச்சரியமாக இருக்கிறது. மற்றொரு யூசர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “சதுரங்கத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது, அது தொடரும். எதிர்காலம் நல்ல கைகளில் உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் “எதிர்காலத்தில் இந்தியா ஒரு செஸ் அதிகார மையமாக மாறும் நோக்கில் செல்கிறது” என்று மற்றொருவர் கூறியுள்ளார்.
ஜனவரி 26, 2021ல் பிறந்த சர்க்கார் ஒரு வருடத்திற்கு முன்பு தனது சதுரங்க பயணத்தை தொடங்கினார். அவர் அக்டோபரில் மேற்கு வங்க மாநில 9 வயதுக்குட்பட்ட ஓபனில் தனது விளையாட்டு போட்டிக்கான வாழ்க்கையை தொடங்கியுள்ளார். தனது போட்டித் தொடரில் அறிமுகமான முதல் நாளிலேயே அனைவரது கவனத்தையும் பெற்றார். அந்த போட்டியில் 8 புள்ளிகளில் 5.5 புள்ளிகளைப் பெற்று இரண்டு மதிப்பிடப்பட்ட வீரர்களை வீழ்த்தி 24வது இடத்தைப் பிடித்தார். மொத்தம் 140 பேர் கலந்துகொண்ட அப்போட்டியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இறுதிச் சுற்றில், அனைத்துலகச் சதுரங்கக் கூட்டமைப்பின் தரவரிசையில் இடம்பெற்றுள்ள இருவரைத் தோற்கடித்தது, அவனது வயதில் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. கடந்த வாரம், சர்க்கார் மேற்கு வங்க மாநில 13 வயதுக்குட்பட்ட ஓபன் போட்டியில் பங்கேற்றார், அங்கு அவர் ஐந்து தரவரிசை வீரர்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையை பூர்த்தி செய்தார், இது அவருக்கு 1555 என்ற ஆரம்ப FIDE ரேட்டிங்கை பெற்று தந்தது.