டோனல்ட் டிரம்ப் 230, கமலா ஹாரிஸ் 210.

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டோனல்ட் டிரம்ப் 230 இடங்களிலும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 210 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். இது தற்போதைய நிலவரம்.

வாக்குகள் எண்ண ஆரம்பித்ததிலிருந்து டோனல்ட் டிரம்ப் 150க்கு மேல் முன்னிலை வகித்தார். அந்த சமயத்தில் கமலா ஹாரிஸ் 99 இடங்களில் முன்னிலையில் இருந்தார்.

ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு இரு வேட்பாளர்களுக்கு இடையிலான வித்தியாசம் குறைந்தது.

கமலா ஹாரிஸ் 165 இடங்களிலும் டோனல்ட் டிரம்ப் 227 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

பென்சில்வேனியாவில் ஆரம்பத்தில் கமலா ஹாரிஸ் முன்னிலைப் பெற்ற நிலையில் தற்போது டோனல்ட் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். நியூயார்க்கில் கமலா ஹாரிஸ் 58.8 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். டோனல்ட் டிரம்ப்புக்கு 41.2 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. முக்கிய மாநிலங்களில் ஒன்றான வடக்கு கரோலைனாவில் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக வெள்ளை மாளிகை முன் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.