மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை, சிறிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகெலே பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

பொலனறுவை, களுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது வீட்டுக்கு அருகில் அலங்கார மீன் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ள நிலையில் மீன் தொட்டிகளைக் காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பிகளில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.