சமஷ்டிக்கு இடமளியோம்! – அநுர அரசு திட்டவட்டம்.

“சமஷ்டி அரசமைப்புக்கும் ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற செய்தியாளர் ஒருவர், சமஷ்டி அரசமைப்பை ஏற்படுத்த வேண்டும்,ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையில் அநுர அரசுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளது என்றும், இது தொடர்பில் அநுர அரசுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி பேச்சு நடத்தியுள்ளது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத், “சமஷ்டி அரசமைப்பையோ அல்லது ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவோ எமது ஆட்சியில் இடமில்லை. அத்துடன், ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் பேச்சு எதனையும் நடத்தவும் இல்லை.” – என்றும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.