மு.பொ.வின் மறைவுக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் இரங்கல்.
ஈழத்தின் முதுபெரும் படைப்பாளுமை மு.பொ.வின் (மு.பொன்னம்பலம்) மறைவுக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“மு.பொ. என அழைக்கப்படும் மு.பொன்னம்பலம் தமது பன்னிரண்டாவது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கியவர். சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விவாதங்கள் ஆகிய துறைகளில் ஈடுபட்டு ஆழ்தடங்களை அவர் பதிவு செய்வதர். எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக இயங்கி வந்தவர்.
மு.பொ. கொழும்புத் தமிழ்ச் சங்க ஆயுள் உறுப்பினராவார். அவருக்கு அண்மையில் தமிழ் நிதி விருதை வழங்கி கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவம் செய்தது.
மு.பொ. வின் இழப்பு ஈழத்து தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று ஆகும். அன்னாருக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றது.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
மு.பொ. வின் ஆத்ம சாந்திக்கு இறை அருள் வேண்டுகின்றோம்.” – என்றுள்ளது.