நாவற்குழியில் ரயில் மோதி அரச உத்தியோகத்தர் காயம்.

யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை ரயில் மோதி அரச உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நாவற்குழி ரயில் நிலையத்தை அண்மித்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவை ஒன்றைக் கடக்க முற்பட்டபோதே ரயில் மோதி அவர் படுகாயமடைந்துள்ளார்.
உள்ளூராட்சி சபையொன்றில் பணிபுரியும் 52வயதான நபரே காலையில் பணிக்குச் செல்லும்போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.
படுகாயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.