இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் மண்மேடு சரிந்து வீழ்ந்து உயிரிழப்பு!

லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹத்தொட்ட அமுன பகுதியில் உள்ள சுரங்கமொன்றில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ஹத்தொட்ட அமுன பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் உட்பட மேலும் நால்வர் தனியார் காணியொன்றில் இரத்தினக்கல் அகழ்வு மேற்கொண்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் லக்கல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.