இரத்தக் காயங்களுடன் மூதாட்டி சடலமாக மீட்பு!
இரத்தக் காயங்களுடன் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பியகம பிரதேசத்திலேயே மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
75 முதல் 80 வயது மதிக்கத்தக்க, 5 அடி உயரமுடைய மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.