பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் லஞ்சம் வாங்கும் போது கைது.

ஒன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியதாக கூறப்படும் ராகம ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ராகம பிரதேசத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது பிள்ளையை அடுத்த வருடம் முதலாம் தரத்தில் சேர்ப்பதற்கு அதிபர் பணம் கேட்டதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அதிபர் பள்ளி அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.