மன்னாரில் 80 லட்சம் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.

மன்னார் இராணுவப்  புலனாய்வுப் பிரிவினர் மற்றும் திருகோணமலைப் பொலிஸ் போதைப்பொருள்  ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து மன்னார் நகரில் மேற்கொண்ட சோதனையில், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று  (08.11) இரவு ,7 மணியளவில் கைது செய்யப் பட்டுள்ள குறித்த நபர் சுமார், 8 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை விற்பனை செய்வதற்காகத் தன்வசம்

வைத்திருந்ததாகத் தெரிவித்த பொலிஸார்’ குறித்த சந்தேக நபரையும் அவரிடமிருந்த கேரள கஞ்சாவையும், மேலதிக விசாரணைகளுக்காக மன்னார்பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், நாளை (09.11.)நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.