வாக்காளர் அட்டை இல்லாதவர்களுக்கு ஒரு அறிவிப்பு

வாக்குச் சீட்டு இல்லாது போனாலும், வாக்காளர் பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய கடிதம், இந்தத் தேர்தலில் வாக்களிக்க செல்லுபடியாகும் என தேர்தல் ஆணையகம், தெரிவித்துள்ளது.

அத்துடன் தேசிய அடையாள அட்டை, வெளிநாட்டு கடவுச்சீட்டு உள்ளிட்ட 8 ஆவணங்களும் வாக்களிக்க செல்லுபடியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்குகளிக்கும் காலம் நேற்றுடன் (08) முடிவடைந்தது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 14ஆம் தகதி 13,421 வாக்குச் சாவடிகளில் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.