கரைச்சி பிரதேச சபையினரால் தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள்.
ஆறு மில்லியன் ரூபாய் செலவில் 617 தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்
கரைச்சி பிரதேச சபையினால் ஆறு மில்லியன் ரூபாய் செலவில் 617 தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு 620 வீதி விளக்குகளை வீதிக்கு பொருத்தும் வேலைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
100w கொண்ட 190 விளக்குகள் 2.16 மில்லியன் ரூபாய் செலவிலும் 50w கொண்ட 430 விளக்குகள் 3.8 ரூபாய் செலவிலுமாக சுமார் 6மில்லியன் ரூபாய்களில் இச் செயற்திட்டம் நேற்று பாரதிபுரத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையை பொறுப்பேற்றபோது 118 சூரிய மின்கலங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. 2018 க்கு பின் சபையை பொறுப்பேற்ற பின் பிரதேச சபையின் 21 வட்டாரங்களிலும் 1482 வீதி விளக்குகள் 2018 ஆம்2019 ஆம் ஆண்டுகளில் பொருத்தப்பட்டிருந்தன.
இவ்வருடமபொருத்தப்படவுள்ள 617 விளக்குகளளுடன் 2110 ஆக அதிகரிக்கும் எனவும் 2021 ஆம் ஆண்டில் 890 வீதி விளக்குகளை பொருத்துவதன் மூலம் 3000 விளக்குகளை பொருத்துகின்ற இலக்கோடு இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்த தவிசாளர் பொருத்தப்பட்டவற்றில் பழுதடைந்துள்ள 90 விளக்குகள் விரைவில் மின்சார சபை மூலமாக திருத்தி மக்கள் பாவனைக்கு வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.