வன்னியில் உதயராசாவுக்குப் பெருகும் ஆதரவு.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தபால் பெட்டிச் சின்னத்தில் ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் ப.உதயராசாவுக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான சுப்பிரமணியம் ரூபாலா தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்கள் மாற்றம் ஒன்றை விரும்பியுள்ளனர். அந்தவகையில் நிலையான அபிவிருத்தியுடனான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் தபால் பெட்டிச் சின்னத்தில் போட்டியிடும் உதயராசாவால் மாத்திரமே முடியும்.
அந்தவகையில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவரது வெற்றிக்காக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான நான் தொடர்ச்சியான பங்களிப்புக்களை வழங்குவதற்காக அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளேன். ஆகவே, எனது ஆதரவாளர்கள் அவரது வெற்றிக்காக உழைக்க வேண்டும்.” – என்றார்.
இதேவேளை, முன்னதாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் அவருக்கு ஆதரவு தெரிவித்ததுடன் தொடர்ச்சியாக வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஜனநாயகத் தேசியக் கூட்டணியில் போட்டியிடும் உதயராசாவின் வெற்றிக்காக உழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.