இணையவழி நிதி மோசடி: 58 இலங்கையர்கள் கைது!

இணையத்தின் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் 58 இலங்கையர்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு, கிருலப்பனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியொன்றில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.