அமரனை தியெட்டர்களிலிருந்து எடுத்து விட நினைத்த உதயநிதி அடித்த அந்தர்பல்டி.

இந்தியன்3, காதலிக்க நேரமில்லை, தக் லைப் என அடுத்தடுத்து பல படங்களை வாங்கி விநியோகம் செய்வதற்கு கொக்கி போட்டு வைத்திருக்கிறதுரெட் ஜெயண்ட் .

சமீபத்தில் வெளியான அமரன் படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் விநியோகம் செய்தது . அதன் மூலம் நல்ல லாபமும் பார்த்து வருகிறது.

கமலின் ராஜ்கமல் நிறுவன பேனரில் தயாரித்த அமரன் படத்திற்கு ஆரம்பத்தில் பல முட்டுக்கட்டைகள் போட்டாலும். இப்பொழுது இந்த படத்தால் டபுள் ஹேப்பி மூடில் இருக்கிறது அமரன் குழு. அமரன் படத்திற்கு பட்ஜெட் அதிகம் ஆனதால் பார்ட்னர் சோனி நிறுவனத்தை கமல் கழட்டிவிட்டார் .

தற்சமயம் அமரன் படம் கிட்டத்தட்ட100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தை விநியோகம் செய்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் அடுத்த படமாகிய கங்குவா படத்தை நவம்பர் 14ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்கிறது.

இதனால் அமரன் படத்தை , கங்குவா ரிலீஸ் நேரத்தில் அனைத்து தியேட்டர்களிலும் இருந்து எடுத்து விட வேண்டும் என எல்லா தியேட்டர்களுக்கும் உதயநிதி கட்டளை ஒன்றை போட்டு, கங்குவாவிற்கு தான் அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என உத்தரவு போட்டுள்ளார். ஆனால் இன்றும் வசூல் வேட்டை ஆடி வருகிறது சிவகார்த்திகேயனின் அமரன்.

இப்பொழுது அமரன் படத்திற்கு கிடைத்த ஆதரவாலும் வசூல் வேட்டையாலும் உதயநிதி அந்தர் பல்டி அடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் படம் அவ்வளவு நாள் ஓடாது என எண்ணிய அவருக்கு இந்த படம் சரியான ஒரு பாடத்தை புகட்டி உள்ளது. இதனால் கங்குவா படம் ரிலீஸ் ஆனாலும் அமரன் படத்திற்கும் காட்சிகளை ஒதுக்குங்கள் என தற்போது உத்தரவு போட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.