பாராளுமன்ற பெரும்பான்மை கிடைக்கும் வரை பழைய அரசாங்கத்தின் கொள்கையே தொடர வேண்டியுள்ளது : NPPயின் லால்காந்த.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்கும் வரை கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளை அப்படியே அமுல்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் குழுவின் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தவுடன் அரசாங்கத்தை அமைக்கும் பணி நிறைவடைந்துவிடும் எனவும், அதன் பின்னர் தான் நாட்டில் பணியாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதுவரை கடந்த அரசாங்கத்தின் கொள்கையே முன்னெடுத்துச் செல்லப்பட்டும் என்றார் அவர்.

கடுகன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.