உத்தரபிரதேசத்தில் நீட் பயிற்சி பெற சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை.. பயிற்சி மைய ஆசிரியர்கள் இருவர் கைது!

உத்தரபிரதேசத்தில் நீட் பயிற்சி பெற சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில், பயிற்சி மைய ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கான்பூரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த ஜனவரியில் உயிரியல் ஆசிரியர் சாஹில் சித்திக் தம்மை வீட்டுக்கு அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

சில நாட்கள் சித்திக் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட சிறுமியை, வேதியியல் ஆசிரியர் விகாஸ் போர்வால் என்பவரும் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் வன்கொடுமை செய்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துவைத்துக்கொண்டு மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி புகாரில் தெரிவித்தார்.

ஏற்கனவே ஒரு மாணவியும் இதே ஆசிரியர்களால் பாதிக்கப்பட்டதாக புகார் பதிவானது. இதையடுத்து துணிச்சலாக சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, இந்த வழக்கை விசாரித்த காவலர்கள் ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.