யாழில் தமிழரசின் இறுதிப் பிரசாரம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டம் இன்று திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், இம்மானுவேல் ஆனோல்ட், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், ஸ்ரீதரன் கிருஷ்ணவேணி, சந்திரகாசன் இளங்கோவன், சசிந்திரன் சுரேகா, தியாகராஜா பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு தமது உரைகளை நிகழ்த்தினர்.