ரிஷாத்தைக் கைதுசெய்ய நீதிமன்றம் தடையுத்தரவு! சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு ஆப்பு.
ரிஷாத்தைக் கைதுசெய்ய நீதிமன்றம் தடையுத்தரவு! சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு ஆப்பு.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனைக் கைது செய்வதற்காகப் பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப் புலானாய்வுப் பிரிவினரால் விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் நிராகரித்துள்ளது.
நீதிமன்றப் பிடியாணை பெற்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்கிரமத்னவுக்கு இன்று காலை பணிப்புரை விடுத்திருந்தார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுதீன், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 222 பஸ்களில், புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை மன்னாருக்கு வாக்களிப்பதற்கு அழைத்துச் சென்றார் எனவும், அந்தநேரத்தில் , 9.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அமைச்சின் பணத்தை இந்தப் போக்குவரத்துக்காக அவர் செலவிட்டார் எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதன்காரணமாகவே அவரைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு கோரப்பட்டது. எனினும், அந்தக் கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதையடுத்துக் குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.