சுண்ணாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்தின் பின் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் , நான்கு போலீசாருக்கு பணி நிறுத்தம்
நேற்று முன்தினம் சுண்ணாகம் பகுதியில் நடந்த விபத்தின் பின், அப் பகுதி பெரும் கலவரம் போல ஆனது.
ஒரு டொல்பின் வாகனத்தில் உராய்வை ஏற்படுத்திக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிள் கடந்து சென்ற பின். அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் போலீஸ்காரர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அச்சமயம் அந்த வாகனத்தை செலுத்திய சாரதியும் , போலீஸ்காரரும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி, அதன் பின் அந்த வாகனத்தில் பயணித்த ஒரு பெண்ணின் கையில் இருந்த இரண்டு மாத குழந்தையை பறித்து வீசுவதற்கு , ஒரு போலீஸ்காரர் முயற்சித்தார் என தெரிய வருகிறது. அந்தப் பெண் , தனது குழந்தையை வீசியதாக சொல்கிறார்.
அந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற ஒரு ஆசிரியர் அதை வீடியோ செய்துள்ளார். அந்த நேரத்தில் அங்கு முச்சக்கர வண்டியில் சில போலீஸ்காரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து , ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஆசிரியரின் கையில் இருந்த தொலைபேசியை பறித்துள்ளார்கள். இந்த தகவல் கிடைக்கும் நேரம் வரை அந்த கைதொலைபேசி அவரிடம் ஒப்படைக்கபடவில்லை என அறிய முடிகிறது.
அந்த வேனின் சாரதியையும் , அந்தப் பெண்ணையும் போலீசார் சுண்ணாகம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் , இந்த சம்பவத்தை பார்த்த மக்கள் அங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அப்போது தேர்தல் பணிக்காக அவ்வழியாக சென்று கொண்டிருந்த அரசியல்வாதிகளான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உட்பட அவரோடு இருந்த சிலர் சம்பவ நிகழ்வு குறித்து போலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் விளக்க முயற்சிக்கிறார்கள். அதன் பின்னர் அந்தப் பெண் விடுவிக்கப்படுகிறார்.
இந்த நிகழ்வு உடனடியாக பதில் போலீஸ் மா அதிபர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு , பதில் போலீஸ் மா அதிபரது உத்தரவின் பேரில், உடனடியாக சம்பவம் குறித்து ஒரு விசாரணையை முன்னெடுக்குமாறு அறிவுறித்தியதோடு, சுண்ணாகம் போலீஸ் நிலையத்திலிருந்த பொறுப்பதிகாரியை அங்கிருந்து உடனடியாக இடமாற்றம் செய்துள்ளார். அத்தோடு அதேபோலீஸ் நிலையத்தில் பணி புரியும் நான்கு போலீசாரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சப் இன்ஸ்பெக்டர் லஹிரு பிரசாத் கங்கானம்கே, லியனாரச்சிகே இந்திக்க , ராஜரத்தினம் ரமேஷ், சமீர சந்தருவன் , ஆகியோர் பணி நிறுத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அத்தோடு போலீசார் தாக்குதல் நடத்தினார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களை கைது செய்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக யாழ் போலீஸ் காரியாலத்தில் இருந்து அறிய கிடைக்கிறது.