தோட்டக் கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்புl

யாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியைச் சேர்ந்தவரே நேற்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், அவரது வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்து அவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.