மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் – கைதடி வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்ட வேளை, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.