வாக்கு உங்கள் உரிமை! கட்டாயம் பயன்படுத்துக!! – தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை.

“வாக்கு உங்கள் உரிமை, நவம்பர் 14 ஆம் திகதி அதனைக் கட்டாயம் பயன்படுத்துங்கள்.”
இவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், தேர்தலை நீதியாக நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும், பாதுகாப்பு ஏற்பாடுகள்கூட உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.