அதிகாரபூர்வமாக உறுதிசெய்த ,வடகொரியா – ரஷ்யா இருதரப்புத் தற்காப்பு உடன்பாடு.

வடகொரியா ரஷ்யாவுடன் செய்துகொண்ட இருதரப்புத் தற்காப்பு உடன்பாட்டை அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ளது.

உடன்பாட்டின்கீழ் வடகொரியாவும் ரஷ்யாவும் எதிரிகளின் தாக்குதலின்போது ஒன்று மற்றதன் உதவிக்கு வரவேண்டும்.

இருநாடுகளும் உடன்பாட்டைக் கடந்த ஜூன் மாதம் செய்துகொண்டன.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உடன்பாட்டை உறுதிசெய்யும் ஆணையில் நேற்று (11 நவம்பர்) கையெழுத்திட்டதாக வடகொரியாவின் அரசாங்க ஊடகமான KCNA கூறியது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் அந்த உடன்பாட்டைச் சட்டமாக்கியுள்ளார்.

ரஷ்யாவில் 10,000க்கும் அதிகமான வடகொரிய வீரர்கள் இருப்பதாகத் தென்கொரியா, அமெரிக்கா, உக்ரேன் ஆகிய நாடுகள் தெரிவித்தன.

வடகொரியா வீரர்களை அனுப்பியதற்குக் கைமாறாக அதன் அணுவாயுதத் திட்டத்தை வலுப்படுத்தும் தொழில்நுட்ப ஆதரவை ரஷ்யா வழங்கக்கூடும் என்று மேற்கத்திய நாடுகள் அஞ்சுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.