மீனவர் ஒருவர் வெட்டிக்கொலை.

வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிஹிரிபென்ன பிரதேசத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.
காலி, மிஹிரிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய மீனவரே உயிரிழந்துள்ளார் என்று ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்விரோதம் காரணமாக மீன்பிடித் துறைமுகத்துக்குச் சென்ற இனங்காணாத மூவரால் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.