வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த தமிழ்ச் சங்கத்தினர்.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கத்தினர் இன்று புதன்கிழமை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்தனர்.
இதன்போது சங்கத்துக்கான நிரந்தர இடம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய திருக்குறள் உரைநூல் இந்தச் சந்திப்பின்போது ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
யாழ். தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி, ஆட்சிக் குழு உறுப்பினர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், செயலாளர் ச.லலீசன், விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.