யாழ். மாவட்டத்தில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கல்.

இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர், நாடாளுமன்றத் தேர்தல் சட்ட வரையறைகளுக்கமைய, தேர்தல் கடமைகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொண்டு, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களை வாழ்த்தி அவர்களுக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைத்தார்.

இந்த நிகழ்வில் மேலதிக அறிவுறுத்தல்களை சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களுக்கு உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.